டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் 4 -பேர் பணியிடை நீக்கம்

டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்  4  -பேர் பணியிடை நீக்கம்
X

பைல் படம்

கூடுதல் விலைக்கு விற்றல், மொத்த விற்பனை செய்தல், ரொக்க இருப்பு குறைவு, அதிகம் போன்ற குற்றச்செயல்களுக்காக பணியிடை நீக்கம்

அரியலூரில் கூடுதல் விலைக்கு விற்றல், மொத்த விற்பனை செய்தல், ரொக்க இருப்பு குறைவு, அதிகம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக டாக்ஸ்மாக் ஊழியர்கள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) எம்.செல்வராஜ் வெளியிட்ட தகவல்:அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றல், மொத்த விற்பனை செய்தல் மற்றும் ரொக்க இருப்பு குறைவு மற்றும் அதிகம் போன்ற குற்றச்செயல்களுக்காக கீழ்கண்ட பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் மேலாண்மை இயக்குனர் உத்திரவினபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 6470-வாரியங்காவல் கடையில் பணிபுரிந்து வந்த மேற்பார்வையாளர் அ.பாலமுருகன், விற்பனையாளர் கே.சிவக்குமார்,6316-வரதராஜன்பேட்டை கடையில் பணிபுரிந்து வந்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் பி.செல்வகுமார், ஆர்.இரவீந்திரன், கே.பழனிவேல் ஆகியோர் அனைவரும் மொத்த விற்பனை செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடை எண் 6473-ஆண்டிமடம் கடையில் பணிபுரிந்து வந்த மேற்பார்வையாளர் சி.பழனிவேல் மற்றும் விற்பனையாளர்கள் ஜி.சண்முகவேல், பி.பிறைச்செல்வன் ஆகியோர் ரொக்க கூடுதல் இருந்ததாலும், கடை எண் 6301-அரியலூர் கடையில் பணிபுரிந்து வந்த மேற்பார்வையாளர்கள் ஜி.இராஜகோபால், கே.சாமிநாதன் மற்றும் விற்பனையாளர்கள் எம்.கருணாநிதி, எஸ்.அக்பர்கான், வி.பாலசுப்ரமணியன் ஆகியோர் ரொக்க குறைவு இருந்ததுபோன்ற குற்றச்செயல்களுக்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!