அரியலூர் மாவட்டத்தில் 27 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு

அரியலூர் மாவட்டத்தில் 27 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு
X

அரியலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு எஸ்பி பெரோஸ்கான் வாழ்த்து தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட எஸ்பி.

அரியலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி புரிந்த காவல் ஆளிநர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் சட்டம் & ஒழுங்கு, காவல் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத 27 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்றவர்களை இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், அனைவரும் காவல் நிலையத்திற்குச் சென்று துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்டு வழக்குகளை உடனுக்குடன் தீர்வுகாண்டு சிறப்பாக பணிபுரிய பாராட்டுக்களை தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!