அரியலூரில் வரும் 25ம்தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.
அரியலூர் மாவட்ட மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விளம்பர பிரச்சார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் ஒருங்கிணைந்து மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விளம்பர பிரச்சார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 25.06.2022 சனிக்கிழமை அன்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் ஒருங்கிணைந்து பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர், ராஜ விக்னேஷ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார்;துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் பெறும் மனுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுகள் ஏதும் இரத்து செய்யப்படமாட்டாது.
18 வயது முதல் 35 வயது வரையிலான 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகம் என தனித்தனி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. எனவே இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையங்கள் ஒருங்கிணைந்து மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விளம்பர பிரச்சார வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சு.கு.இரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu