+2 தேர்வு முடிவு: அரியலூர் மாவட்டத்திற்கு மாநில அளவில் 8-வது இடம்

+2 தேர்வு முடிவு: அரியலூர் மாவட்டத்திற்கு மாநில அளவில் 8-வது இடம்

பைல் படம்

+2 தேர்வு முடிவில் அரியலூர் மாவட்டத்திற்கு மாநில அளவில் 8-வது இடம் கிடைத்து உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த மே 2022 பிளஸ்2 பொதுத்தேர்வினை 87 பள்ளிகளைச் சேர்ந்த 3923 மாணவர்களும், 4555 மாணவிகளும் ஆக மொத்தம் 8478 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3742 மாணவர்களும், 4437 மாணவிகளும் ஆக மொத்தம் 8179 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.47 ஆகும்.

53 அரசு பள்ளிகளில் 2343 மாணவர்களும், 2250 மாணவிகளும் ஆக மொத்தம் 4593 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2180 மாணவர்களும், 2137 மாணவிகளும் ஆக மொத்தம் 4317 தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 93.99 ஆகும்.

9 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 611 மாணவர்களும், 1529 மாணவிகளும் ஆக மொத்தம் 2140 பேர் தேர்வு எழுதினர். இதில் 595 மாணவர்களும்,1525 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 99.06 ஆகும்.

2 அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 39 மாணவர்களும், 34 மாணவிகளும் ஆக மொத்தம் 73 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 மாணவர்களும், 33 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 97.26 ஆகும்.

15 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 730 மாணவர்களும், 649 மாணவிகளும் ஆக மொத்தம் 1379 பேர் தேர்வு எழுதினர். இதில் 729 மாணவர்களும், 649 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.93 ஆகும்.

8 சுயநிதி மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 200 மாணவர்களும், 93மாணவிகளும் ஆக மொத்தம் 293 பேர் தேர்வு எழுதினர். இதில் 200 மாணவர்களும், 93மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும்.

மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி - 7, அரசு உதவிபெறும் பள்ளி - 4, மெட்ரிக் பள்ளி 13, சுயநிதி பள்ளி - 9 ஆக மொத்தம் 33 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

100 சதவீதம் பெற்ற பள்ளிகள் விபரம்

அரசுப்பள்ளிகள்

1. அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யப்பநாயக்கன்பேட்டை

2. அரசு மேல்நிலைப்பள்ளி, உட்கோட்டை

3. அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளி, வெத்தியார்வெட்டு


4. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆனந்தவாடி

5. அரசு மேல்நிலைப்பள்ளி, குறிச்சிக்குளம்

6. அரசு மேல்நிலைப்பள்ளி, பரணம்

7. அரசு மேல்நிலைப்பள்ளி, தளவாய்


நிதியுதவி பெறும் பள்ளிகள்


1. பாத்திமா (பெ) மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்

2. அலங்கார அன்னை (பெ) மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை

3.தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை

4. புனித பிலோமினால் மேல்நிலைப்பள்ளி, குழுமூர்

சுயநிதி பள்ளிகள்

1. பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம்2. நாளந்த மேல்நிலைப்பள்ளி, இராயம்புரம்

3. கௌதமபுத்தர் மேல்நிலைப்பள்ளி, மணகெதி

4. மீனாட்சி இராமசாமி மேல்நிலைப்பள்ளி, தத்தனூர்

5. இந்திரா பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, தழுதாழைமேடு

6.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, பாப்பாக்குடி

7. கலைமகள் மேல்நிலைப்பள்ளி, துளார்

8. அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, செந்துறை

9. வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளி, நல்லாம்பாளையம்

மெட்ரிக் பள்ளிகள்

1. அரசு நகர் (மெ) மேல்நிலைப்பள்ளி, அரியலூர்

2. மான்ட்போர்ட் (மெ) மேல்நிலைப்பள்ளி, அரியலூர்

3.நிர்மலா (மெ) மேல்நிலைப்பள்ளி, அரியலூர்

4. சுவாமி (பெ) (மெ) மேல்நிலைப்பள்ளி, கீழப்பழுவூர்

5.சுவாமி (மெ) மேல்நிலைப்பள்ளி, கீழப்பழுவூர்

6. மீனாட்சி இராமசாமி (மெ) மேல்நிலைப்பள்ளி, தத்தனூர்

7. பெரியார் (மெ) மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்

8. பாத்திமா (மெ) மேல்நிலைப்பபள்ளி, ஜெயங்கொண்டம்

9.நவ்பால் (மெ) மேல்நிலைப்பபள்ளி, உடையார்பாளையம்

10.கோகிலாம்பாள் (மெ) மேல்நிலைப்பபள்ளி, குழவடையான்

11. புனித தெரசா (மெ) மேல்நிலைப்பபள்ளி, செந்துறை

12. வித்யா மந்திர் (மெ) மேல்நிலைப்பபள்ளி, ஆலத்தியூர்

13. ஸ்ரீசௌபாக்கியா (மெ) மேல்நிலைப்பபள்ளி, ஆண்டிமடம்

Tags

Next Story