அரியலூரில் 184 பள்ளிகள் திறப்பு, மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்
![அரியலூரில் 184 பள்ளிகள் திறப்பு, மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அரியலூரில் 184 பள்ளிகள் திறப்பு, மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்](https://www.nativenews.in/h-upload/2021/09/01/1273823-school-1.webp)
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.
கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இன்று பல கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்திரவிட்டது.
இதனையொட்டி அரியலூர் நகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என 184 பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கபட்டன.
முன்னதாக கிருமிநாசினி கொண்டு பள்ளி வகுப்பறைகள் சுத்தம் செய்யபட்டது. காலையில் பள்ளிக்கு வருகைதந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யபட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே வகுப்பறைகளில் அமர அனுமதிக்கபட்டனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கபட்டதால் மாணவ, மாணவிகள் தங்களது சக நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.
காலை 9.30 மணி முதல் மதியம் 3.30 மணிவகுப்பு பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு உளவியல் ரிதியாக அவர்களை தயார் செய்த பிறகே பாடங்கள் நடத்தப்படும் என்ற நிலையில், முககவசம் அணிந்த நிலையில் பலமணி நேரம் வகுப்புகளை கவனிக்கும் மாணவர்களின் மனநிலை போகப்போகத்தான் தெரியவரும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu