அரியலூர்:ஊரகஉள்ளாட்சி இடைத்தேர்தலில் 12 பேர் வேட்பு மனுதாக்கல்

அரியலூர்:ஊரகஉள்ளாட்சி இடைத்தேர்தலில் 12 பேர் வேட்பு மனுதாக்கல்
X
கோப்பு காட்சி
அரியலூர் மாவட்டத்தில் 16 பதவிகளுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 12 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் 16 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாயகனைப்பிரியாள் மற்றும் மணகெதி ஊராட்சி மன்ற தலைவர் பதவி என மூன்று ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓட்டக்கோவில் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 6), திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றியூர் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 6) மற்றும் கோவிலூர் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 1), செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் தளவாய் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 9), கீழமாளிகை ஊராட்சி உறுப்பினர் (வார்டு 4) மற்றும் சிறுகடம்பூர் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 3), ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உட்கோட்டை ஊராட்சி உறுப்பினர் (வார்டு 10) மற்றும் ஜெ.தத்தனூர் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 5), ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் அழகாபுரம் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 8), நாகம்பந்தல் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 6), இடையக்குறிச்சி ஊராட்சி உறுப்பினர் (வார்டு 2) மற்றும் இலையூர் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 9), தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் அம்பாபூர் ஊராட்சி உறுப்பினர் (வார்டு 8) ஆகிய 13 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சாந்திலெட்சுமிகாந்தன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் அம்பாபூர் ஊராட்சி (வார்டு 8)உறுப்பினர் பதவிக்கு பழனிச்சாமி, சீமான் ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உட்கோட்டை ஊராட்சி (வார்டு 10) உறுப்பினர் பதவிக்கு வெங்கடேஸ்வரன் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் சிறுகடம்பூர் ஊராட்சி (வார்டு 3) உறுப்பினர் பதவிக்கு லெனின்அருள்பிரகாசம் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் தளவாய் ஊராட்சி (வார்டு 9) உறுப்பினர் பதவிக்கு ராஜேஸ்வரி, ராஜா, தருமன் ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் அழகாபுரம் ஊராட்சி (வார்டு 8) உறுப்பினர் பதவிக்கு பூராசாமி வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் இலையூர் ஊராட்சி (வார்டு 9) உறுப்பினர் பதவிக்கு செவ்வந்தி, நீலமேகம் ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடத்திற்கு ஒருவரும் மற்றும் 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 11 பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

22ம்தேதி மதியம் 3மணியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைகிறது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்