ஆசிரியர் வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை

ஆசிரியர் வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை
X

அரியலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் ரூ. 1 லட்சம் பணம் மற்றும் 23 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராமத்தில் வசிப்பவர் கொளஞ்சியப்பன். ஓய்வுபெற்ற ஆசிரியர். இவருக்கு ஆசிரியையாக பணிபுரியும் மனைவி ஹேமலதா மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அனைவரும் பல்வேறு வேலையாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டனர்.இந்நிலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் பீரோவில் இருந்த ரூ. ஒரு லட்சம் பணம், வளையல், மோதிரம், செயின், தோடு உள்ளிட்ட சுமார் 23 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவஇடம் வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். டிஎஸ்பி தேவராஜ் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மோப்ப நாய் மட்டும் கைரேகை நிபுணர்கள் நிகழ்விடத்தில் முகாமிட்டு தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி