வேலையில் ஓவர் கெடுபிடி... 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல்

வேலையில் ஓவர் கெடுபிடி... 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
X

வேலையில் ஓவர் கெடுபிடி செய்வதாக கோவிந்தபுத்தூரில் 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலையில் ஓவர் கெடுபிடி செய்வதாக அரியலூர் அருகே 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் 100 நாட்கள் வேலை நடைபெற்று வருகிறது. இங்கு காலை 7 மணிக்கு பணியாளர்கள் வந்து கையெழுத்திட வேண்டும், புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும் என்று ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் வீட்டு வேலைகள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவது, சமைப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகள் இருக்கும் நிலையில், 7 மணிக்கு என்பது சாத்தியமில்லை. 9 மணிக்குத்தான் வர முடியும். எனவே, கையெழுத்து போடுவது, புகைப்படம் எடுப்பதை 9 மணிக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காரைக்குறிச்சிமுத்துவாஞ்சேரி சாலையில் கோவிந்தபுத்தூர் பஸ் நிறுத்தம் முன்பு 100 நாள் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் மற்றும் விக்கிரமங்கலம் போலீசார் 8.30 மணிக்கு வருகை தர கேட்டுக்கொண்டதை ஏற்று கொண்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!