கூடுதல் வாக்குச்சாவடிகள்- அனைத்து கட்சிகள் ஒப்புதல்

அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக 201 வாக்குச்சாவடிகள் அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக 201 வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளது. இதற்கான அரசியல் கட்சிகளின் ஒப்புதல் கூட்டம் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரத்னா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் கூடுதலாக 201 வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளது. அதில் 189 வாக்குச்சாவடிகள் அந்தந்த மையங்களிலேயே கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 வாக்குச்சாவடிகள் அருகாமையில் உள்ள மாற்றுப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார்.
இதற்கு அரசியல் கட்சியினர் ஒப்புதல் அளித்ததையடுத்து இப்பட்டியலை மாநில தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது என்றும், ஒப்புதல் அளித்தவுடன் பொது மக்களுக்கு வாக்குச்சாவடி குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரத்னா தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாச்சியர்கள் மற்றும் தேர்தல் தாசில்தார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu