ரயில்வே தனியார் மயமாவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் அரியலூரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரியலூர் ரயில் நிலைய பொறியாளர் அலுவலகம் முன்பு சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரயில்வே துறையில் பணிமனைகள் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். 30 வருட சர்வீஸ் முடித்தவர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 252 ரயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, ரயில்வே நிலையங்களை தனியாருக்கு விற்பது என்ற முடிவை கைவிட வேண்டும்.
55 வயது மற்றும் 30 ஆண்டுகள் சர்வீஸ் முடித்தவர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu