ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீர் சாவு

ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீர் சாவு
X
ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீரென இறந்த சம்பவம் அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(57). இவர் அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் ஒரு வருடத்திற்கு மேலாக நிரந்தர ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பாஸ்கரன் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிமென்ட் ஆலைக்கு வழக்கம்போல் பணிக்கு வந்தார்.

பின்னர் நேற்று காலை பாஸ்கரன் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது ஆலை உள்ளே மயக்கமடைந்தார். பின்னர் ஆலை நிர்வாகத்தினர் மயக்கமடைந்த பாஸ்கரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாஸ்கரனை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரன் மகன் பிரேம்குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமென்ட் ஆலையில் ஊழியர் இறந்த சம்பவம் ஊழியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!