அரியலூர் : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 75.69 சதவீத வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு இயந்திரம் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 75.69 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சிக்கு 34 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு 38 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. உடையார்பாளையம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 14 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இன்று காலை 7மணியில் இருந்து மாலை 6வரை நடைபெற்ற 101 வாக்குச்சாவடிகளிலும் காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7மணிமுதல் மதியம் 5 மணிவரை பொதுவாக்காளர்களுக்கும், மாலை 5மணிமுதல் 6மணிவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாக்குபதிவு நடைபெற்றது.
அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளிலும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்தமாக 75.69 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுள்ளது.
அரியலூர் நகராட்சியில் உள்ள 11,724 ஆண்வாக்காளர்கள் மற்றும் 12,794 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 24,518 வாக்காளர்களில், 8,310 ஆண் வாக்காளர்கள் மற்றும் 9,143 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 17,453 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 71.18 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 13,502 ஆண்வாக்காளர்கள் மற்றும் 14,540 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 28,042 வாக்காளர்களில், 10,211 ஆண் வாக்காளர்கள் மற்றும் 11,224 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 21,435 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 76.44 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 4 676 ஆண்வாக்காளர்கள் மற்றும் 4 770 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9 446 வாக்காளர்களில், 3 712 ஆண் வாக்காளர்கள் மற்றும் 4 067 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 779 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 82.35 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3 499 ஆண்வாக்காளர்கள் மற்றும் 3 704 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7 203 வாக்காளர்களில், 2 707 ஆண் வாக்காளர்கள் மற்றும் 3 007 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5 714 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 79.33 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 4 இடங்களில் உள்ள 33 401 ஆண்வாக்காளர்கள் மற்றும் 35 808 பெண் வாக்காளர்களில் என மொத்தம் 69 209 வாக்காளர்களில், 24 940 ஆண் வாக்காளர்கள் மற்றும் 27 441 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 52 381 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
மொத்தம் 75.69 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu