அரியலூர் : மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

அரியலூர் : மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்
X

அரியலூரில் வாக்குசாவடியில் வாக்களிக்க காத்திருக்கும் மக்கள் 

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற தேர்தலில் மதியம் 3 மணி வரை 62.34 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் நகராட்சிக்கு 34 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு 38 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உடையார்பாளையம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளும், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று காலை 7மணியில் இருந்து மாலை 6வரை நடைபெறும் 101 வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மதியம் 3மணிவரை அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளிலும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய பேரூராட்சிகளிலும் ஒட்டுமொத்தமாக 62.34 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுள்ளது.

அரியலூர் நகராட்சியில் உள்ள 11,724 ஆண் வாக்காளர்கள் மற்றும் 12,794 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 24,518 வாக்காளர்களில், 6,801 ஆண் வாக்காளர்கள் மற்றும் 7,384 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 14185 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 57.86 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 13,502 ஆண்வாக்காளர்கள் மற்றும் 14,540 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 28,042 வாக்காளர்களில், 8,248 ஆண் வாக்காளர்கள் மற்றும் 8,957 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 17,205 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 61.35 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 4,676 ஆண்வாக்காளர்கள் மற்றும் 4,770 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9,446 வாக்காளர்களில், 3,183 ஆண் வாக்காளர்கள் மற்றும் 3,517 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,700 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 70.93 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3,499 ஆண்வாக்காளர்கள் மற்றும் 3,704 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 7,203 வாக்காளர்களில், 2,346 ஆண் வாக்காளர்கள் மற்றும் 2,711 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5057 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 70.21 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 4 இடங்களில் உள்ள 33,401 ஆண்வாக்காளர்கள் மற்றும் 35,808 பெண் வாக்காளர்களில் என மொத்தம் 69,209 வாக்காளர்களில், 20,578 ஆண் வாக்காளர்கள் மற்றும் 22,569 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 43,147 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 62.34 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Tags

Next Story