அரியலூர் மாவட்டத்தில் இரவு 7மணிவரை 39,386 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி

அரியலூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்
இன்று அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறையின் சார்பில் மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனங்களின் சுய உதவி குழுக்கள், சமூக ஆர்வலர்கள், செஞ்சிலுவை சங்கங்கள் போன்ற இதர தன்னனார்வலர்கள் மூலம் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.
இதன்அடிப்படையில் இன்று காலை 7மணிக்கு தொடங்கி இரவு ஏழு மணி வரை 382 மையங்களில் 39386 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரியலூர் ஒன்றியத்தில் 116இடங்களில் 7,061 நபர்களுக்கும், திருமானூர் ஒன்றியத்தில் 55இடங்களில் 6,519 நபர்களுக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ஒன்றியத்தில் 43இடங்களில் 4,280 நபர்களுக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 60 இடங்களில் 10,728 நபர்களுக்கும், செந்துறை ஒன்றியத்தில் 54இடங்களில் 6,338 நபர்களுக்கும், தா.பளூர் ஒன்றியத்தில் 54 இடங்களில் 4,460 நபர்களுக்கும், சேர்ந்து 382 இடங்களிர் 39,386 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளிலும், கிராமப்புறங்களில் கையிருப்பு உள்ள இடங்களிலும் இரவு 8.30மணிவரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்கின்றது.
எனவே அரியலூர் மாவட்டத்தில் 40ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்ற இலக்கை தாண்டி தடுப்பூசிகள் செலுத்தப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu