உங்களுக்கு மலச்சிக்கலா? தினமும் இந்த யோகாவை செய்யுங்கள்
யோகாசனம் குறித்து பேசுகிறார் யோகா ஆசிரியர் விஜயகுமார்.
இயற்கை உணவு தவிர்ப்பு, மேல்நாட்டு கலாச்சாரம், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இன்று வயது வித்தியாசம் இன்றி ஒவ்வொருவருக்கும் ஏதாவது உடல் ரீதியான பிரச்சினை அன்றாடம் ஏற்படுகிறது. அந்த வகையில் மலச்சிக்கல் பிரச்சினையும் இன்று பலருக்கு உள்ளது. அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் அந்த காலத்தில் வயது முதிர்வின் காரணமான மலம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுவது உண்டு. ஆனால் இன்று நாற்பது வயதை நெருங்குபவர்கள் கூட அன்றாம் மலம் கழிப்பதில் பிரச்சினை ஏற்பட்டு மருத்துவர்களை நாடி செல்லும் நில ஏற்பட்டுள்ளது.
உடல் உழைப்பு இல்லாததும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு ஒரு காரணம் ஆகும். மருந்து, மாத்திரை இன்றி நமது உடலில் உள்ள கழிவுகளை அன்றாடம் வெளியேற்றுவதற்கு என்றே சில யோகாசனங்கள் உள்ளன. அந்த யோகாசனங்கள் என்ன என்பதை பார்ப்போமா?
திருச்சி புத்தூர் கிளை நூலகம், வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து மலச்சிக்கல் நீங்க உதவும் யோகா பயிற்சி வகுப்பினை நூலகத்தில் நடத்தியது. நூலகர் புகழேந்தி வரவேற்றார்.
மலச்சிக்கல் நீக்க உதவும் யோகா குறித்து அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசினார். அவர் கூறியதாது:-
யோகா என்பது உடலையும், உள்ளத்தையும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். மலச்சிக்கலை நீக்க பஸ்தி மோத்தாசனம், உஸ்ட்ராசனம், தனுராசனம், அர்த்த மஸ்தியேந்திராசனம், மலாசனா உள்ளிட்ட ஆசனப் பயிற்சிகள் உதவுகிறது.
நமது உடலின் செரிமான மண்டலம் சிறந்த முறையில் இயங்கவும், நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், குடல் இயக்கம் நல்லமுறையில் இயங்குவது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது மலத்தை வெளியேற்றி விட வேண்டும். ஆனால், நவநாகரீக வாழ்க்கை முறையில், மல சிக்கல்களை நாள்தோறும் பலர் எதிர்கொண்டு வருகின்றனர். இது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் காய்கறி கீரை உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் முப்பது நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா பயிற்சியினை தொடர்ந்து செய்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நாள்பட்ட எலும்பு அல்லது தசை தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரின் தகுந்த ஆலோசனையை பெற்று ஆசன பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu