நீங்கள் 60 வயது நிறைவடைந்த சீனியர் சிட்டிசனா? முதலில் இதனை படியுங்கள்
மூத்த குடி மக்களுக்கு ஒரு நற்செய்தியை தமிழக அரசு வழங்கி உள்ளது.இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் முறையில் கைபேசி எண் 14567 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நாம் தொடர்பு கொண்டால் மறுமுனையில் அவர்கள் பதில் பேசி நமக்கு என்ன குறை என்று கேட்பார்கள்.
வயதானவர்களுக்கு பெற்ற பிள்ளைகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்ற குறையா அல்லது மருத்துவ ரீதியான குறையா அல்லது ஓய்வூதியம் பெறுவதற்கான ஏதாவது தடை உள்ளதா வங்கி சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஏதாவது குறை இருப்பின் கூறுங்கள் என்று கேட்பார்கள்.
இந்த சேவை மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர்க்கும் மையமாக செயல்பட தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது எங்கு சென்றாலும் நிதானமாகவும் பாதுகாப்பாகவும் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல முடியாமல் விட்டால் மேற்கண்ட எண்ணான 14567 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூறினால் நமக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஒரு பெரிய வழிகாட்டியாக நமது உயிருக்கு பாதுகாப்பாக அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தமிழக அரசு செய்துள்ளது.
இதனால் அனைத்து மூத்த குடிமக்களும் வரவேற்பு கொடுத்து தமிழக அரசை பாராட்டி வருகிறார்கள். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சேவை மையம் ஆகும். அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் எந்த வேலைக்கும் எந்த அச்சமும் இன்றி நம்முடன் எப்பொழுதும் ஒரு உதவியாளர் இருப்பது போல் இந்த தமிழக அரசின் சேவை எண் 14567 . இதனை யாரும் மறக்க வேண்டாம் என்று அன்புடன் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.எனவே இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பயன் பெறுங்கள் உதவி கேளுங்கள்.
இந்த நம்பரில் ஒரு சீனியர் சிட்டிசன் தொடர்பு கொண்டபோது எதிர்முனையில் பேசிய பெண்மணி அவரது பெயர், ஊர், விலாசத்தை பதிவு செய்து விட்டு என்னகுறை என்று கேட்டபோது தனக்கு நான்குமாத டி.ஏ.அரியர் கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார். எங்குவேலை செய்து ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டபோது எல்லாவிபரத்தையும் தெரிவித்து உள்ளார். அது வங்கி சம்பந்தமான பிரச்சினை.
நாளை காலையில் அவர்களுடைய டீம் நேரடியாக குறிப்பிட்ட வங்கி கிளை க்கு போய் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். உடல்நலம் பற்றியும் உடம்பில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் சொல்லுங்கள் உதவி செய்கிறோம் என்று மிகபரிவுடன் கேட்டிருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் உங்களை கவனித்துக்கொள்கிறார்களா அருகில் இருக்கிறார்களா தூரத்தில் இருக்கிறார்களா என்று மிக அக்கறையுடனும் விசாரித்து இருக்கிறார்கள்.
மேலும் எந்த குறையிருந்தாலும் சொல்லுங்கள் நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்றும் கூறி இருக்கிறார்கள். இந்த முதியோர் குறைதீர்க்கும் சேவை மையத்தை மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து நடத்துவதாகவும் பரிவுடன் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே உங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் இந்த 14567 ல் தொடர்பு கொண்டு உரிய தீர்வை பெறலாம். முதியோர்களுக்கு இந்த கைபேசி எண் ஒரு வரப்பிரசாதம் என்று சொன்னால் மிகையாகாது.n
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu