நீங்க அறிவியல் ஆசிரியரா? ரூ.25,000.. உடனே விண்ணப்பியுங்கள்!
மாணவ சமுதாயத்தின் நலனுக்காக இன்றியமையாது பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் "சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது"னை வழங்கி கவுரவிக்க அறிவியல் நகரத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும், ஊக்கப்படுத்தவும் அதன் ஊடாக மாணாக்கர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும், வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ.25,000/- க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்விருதிற்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் புவியியல் / கணினி அறிவியல் / வேளாண் நடைமுறைகள் ஆகிய 5 பாடப்பிரிவுகள் அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவற்றுள் 5 விருதுகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், மேலும் 5 விருதுகள் பொதுப்பிரிவில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் பிரித்து வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப்படிவம், விண்ணப்பிக்க தொடர்பான விதிகள் ஆகியவைகளை http://www.sciencecitychennai.in/ என்ற அறிவியல் நகர இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2020-21- ஆம் ஆண்டிற்கான "சிறந்த அறிவியல் ஆசிரியர்கள் விருது'' வழங்க ஏதுவாக மேல் குறிப்பிட்டுள்ள ஐந்து வகைப் பாடப்பிரிவுகளில், பாடப்பிரிவுக்கு ஒன்று வீதம் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பாடப்பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் ஆணையர், பள்ளிக் கல்வித் துறை அவர்களின் வழியாக அறிவியல் நகரத்திற்கு 07.03.2022 மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம்: Click Here
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu