இன்று சச்சின்டெண்டுல்கர் பிறந்த நாள்-நடிகர் அஜித்தின் கல்யாண நாள்
இன்று சச்சின் பிறந்த நாள் அஜித்தின் கல்யாண நாள்
மே 1 அஜித் பிறந்த நாள் சச்சினின் கல்யாண நாள் .,.,.
சச்சின் டெண்டுல்கர் தனது 49-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். சச்சின் பிறந்த நாளுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.
டெண்டுல்கர் ஏப்ரல் 24,1973 இல் மும்பையில் தாதர் பகுதிளில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் மகாராட்டிரா மற்றும் ராஜபூர் சரஸ்வத் பிராமண குடும்ப மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர்.இவரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் பரவலாக அறியப்படும் மராத்திய புதின எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார். இவரின் தாய் ரஞ்னி காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். ரமேஷ் தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான சச்சின் தேவ் பர்மன் என்பாரின் பெயரையே தனது மகனுக்கு பெயரிட்டார். சச்சினுக்கு நிதின், ஐத் எனும் இரு மூத்த சகோதரர்களும் சவிதா எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். இவர்கள் மூவரும் இவரின் தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் ஆவர்.
சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார்.
கிரி்க்கெட் என்பது ஒரு மதமாக இருந்தால், அதன் கடவுள் சச்சின் டெண்டுல்கர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இந்தியாவில் முதன் முதலாக 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோது மைதானத்தில் பந்துகளை எடுத்துக் கொடுக்கும் 'பால் பாய்'-ஆக சச்சின் இருந்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் முதலில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என அசைபட்டார். இதற்கு என்று எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமிக்கு வந்த அவர் ஆஸ்திரேலியா வீர்ர் டெனிஸ் லில்லியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு காரணம் அவரது உயரம். பின்னர் அவர் பேட்டிங்கில் தனது திறமையை நிருபித்தது வேறு கதை.
இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான் வீரர்கள் விளையாடியுள்ளானர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் இந்திய அணிக்காக தங்களுடைய பங்களிப்பை அளித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வரலாற்றை எப்போது படித்தாலும், அதில் முதலில் வருவது சச்சின் டெண்டுல்கர். சச்சின் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்காக விளையாடியதுடன், கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் புரிந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 11 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக ஒரே ஒரு டி-20 போட்டியில் மட்டுமே பங்கேற்ற சச்சின், 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2013ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட் விளையாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சச்சினின் சாதனைகளை பாராட்டும் விதமாக இந்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ராஜ்ய சபா எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். இன்று தனது 49 வது பிறந்தநாளை சச்சின் கொண்டாடுகிறார். இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று பிறந்த நாள் காணும் அவரை நாமும் வாழ்த்துவோம்.
அஜீத் குமார், ஷாலினி இன்று தங்கள் 22 வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர்.
அஜீத் குமார் சக நடிகையான ஷாலினியை காதலித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம் அமர்க்களம். அப்போது தான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 1999ம் ஆண்டு அமர்க்களம் ஷூட்டிங்கில் அஜீத் ஷாலினியிடம் தனது காதலை தெரிவித்தார். ஷாலினியும் அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து 24-4-2000 அன்று அஜீத், ஷாலினி திருமணம் நடந்தது. அவர்கள் திருமணத்திற்கு ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர், நடிகையர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu