/* */

5 விருதுகளை பெற்ற 'அர சுருட்டு' குறும்பட குழுவினருக்கு பாராட்டு

5 விருதுகளை பெற்ற ‘அர சுருட்டு’ திருச்சி குறும்பட குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

5 விருதுகளை பெற்ற அர சுருட்டு குறும்பட குழுவினருக்கு பாராட்டு
X

அர சுருட்டு குறும்பட குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குறும்பட இயக்குனர் விஜய் பார்த்திபன் இயக்கத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்களான இளைஞர்கள் பணியாற்றி படப்பிடிப்பு முழுவதும் திருச்சி மாவட்டத்திலையே படமாக்கபட்ட பைலட் மூவி படம் அர சுருட்டு. இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைகளத்துடன் ஒரு சைக்கோ திரில்லர் கதைகளம் கொண்ட படமாக எடுக்கப்பட்டது.

இப்படத்தை பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ள படகுழுவினர் அனுப்பினர். அதில் Mash Shortfilm 2022 சார்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் அர சுருட்டு குறும்படம் கலந்து கொண்டது. இக்குறும்பட போட்டியில் தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், வங்காளம், கன்னடம்,தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளில் எடுக்கப்பட்ட பல்வேறு படங்கள் கலந்து கொண்டன.

இதில் தமிழில் கலந்து கொண்ட படங்களில் சிறந்த படமாக அர சுருட்டு தேர்தெடுக்கபட்டது. மேலும் இப்படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 5 விருதுகளை பெற்றுள்ளது.

மேலும் Chalchitra Shortfilm Competition 2022 ல் சிறந்த திரில்லர் படத்திற்கான விருதையும் (Southindian Shortfilm Competition 2022) போட்டியில் சிறந்த படத்திற்கான விருதையும் அர சுருட்டு படம் பெற்றுள்ளது. இந்த விருதுகள் திருச்சி மாவட்டதை சேர்ந்த படகுழுவினர்களின் உழைப்பிற்கு திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

சிறந்த இயக்குனருக்கான விருது அர சுருட்டு படத்தின் இயக்குனர் விஜய் பார்த்திபனுக்கும், சிறந்த நடிகருக்கான விருது படத்தில் நடித்த சமூக ஆர்வலரும் நடிகருமான திருச்சி ஆர். ஏ. தாமசுக்கும், சிறந்த இசைக்கான விருது ஜெசுராஜ்க்கும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது தங்கபிரகாஷ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.



இப்படகுழுவினருக்கு சென்னை வடபழனியில் உள்ள தமிழ் சினிமா கம்பெனி அலுவலகத்தில் பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. இப் பாராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் திரைப்பட துறையில் கேப்டன் பிரபாகரன்,புலன் விசாரணை, பூந்தோட்ட காவல்காரன், மாநகர காவல், மக்கள் ஆட்சி, அரசியல், உளவுதுறை, குற்றப்பத்திரிக்கை போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு அனல் பறக்கும் வசனங்களை எழுதியவரும் திரைப்பட இயக்குனருமான கலைமாமணி லியாகத் அலிகான் அர சுருட்டு படத்தை பார்த்து விட்டு பேசுகையில் இப்படத்தில் பணிபுரிந்துள்ள இளைஞர்கள் பெரும்பாலும் புதியவர்கள் என்பது மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. இன்றைய இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள் அர சுருட்டு படம் வெளியாவதற்கு முன்பாக பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் விருது பெற்றிருப்பது பாராட்டுகுரியது. இப்படம் சிறப்பாக எடுக்க பட்டுள்ளது. விருதுகள் பெற்றதற்கும் எதிர்காலத்தில் பல புதுமையான படைப்புகளை எடுத்து எதிர்காலத்தில் இன்னும் பல விருதுகளை பெறவும் அர சுருட்டு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.


திரைப்பட தயாரிப்பாளரும் திரைப்பட இயக்குனரும் தமிழ் சினிமா கம்பெனியின் நிர்வாகியுமான எம்.கஸாலி பட குழுவினருக்கு தெரிவித்த பாராட்டில் பொதுவாக படம் எடுக்கும் நபர்கள் தொழில் நுட்பம் மற்றும் திரைப்படங்களில் அனுபவமிக்க நபர்களை தேர்ந்தெடுத்து படத்தில் பணியாற்ற சென்னைக்கு வருவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒரு சைக்கோ திரில்லர் படத்தை முழுக்க முழுக்க திருச்சி மாவட்டத்தில் எடுத்து அனைத்து பணிகளையும் அங்கேயே முடித்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இப்படம் மிகவும் நேர்த்தியாக முழு திரைப்படம் பார்த்த ஒரு அனுபவத்தை தருகிறது. மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவு நடிப்பு இயக்கம் இசை படத்தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. படகுழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டதுடன் இப்படிபட்ட திறமை மிக்க இளைஞர்களுக்கு புதிய தொழில் நுட்ப கருவிகள் வழங்கினால் இன்னும் சிறப்பான படைப்புகளை தருவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது ஆகவே எதிர்காலத்தில் தமிழ் சினிமா கம்பெனியின் சார்பில் படம் எடுக்க பட குழுவினருக்கு வாய்ப்பு வழங்கபடும் என்று கூறினார்.

இப்பாராட்டு விழா நிகழ்வில் அர சுருட்டு படத்தின் இயக்குனர் விஜய் பார்த்திபன், சமூக ஆர்வலரும் நடிகருமான திருச்சி ஆர். ஏ. தாமஸ் மந்தமாருதம் திரைப்பட இயக்குனர் இளமாறன், பாடகர் கோவிந்தராஜ் இணை இயக்குனர் பூபதி, உதவி இயக்குனர் வெங்கடேசன் மற்றும் படகுழுவினர் கலந்து கொண்டனர். விரைவில் பல விருதுகள் பெற்ற அர சுருட்டு படத்தினை வெளியிடுவதற்க்கான பணிகள் நடைபெற்று வருவதாக படகுழுவினர் தெரிவித்தனர்.

Updated On: 21 July 2022 4:43 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!