கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மீண்டும் ஒரு வாய்ப்பு

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மீண்டும் ஒரு வாய்ப்பு
X
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

இந்த மாத இறுதிவரை அவர்களுக்கு விண்ணப்பங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த திட்டத்தில் கடந்த ஜனவரி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இனி இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படும். முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படும். முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படும். புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு பணம் வழங்கப்படும். இதில் புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புது ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 1.40 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத்தில் புதிய பயனாளிகளுக்கு கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விரிவாக்கம் செய்யப்படும் விண்ணப்பங்கள் அடுத்த 2 வாரங்களில் ஏற்கப்படும். அவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஜூலை 12ம் தேதிக்குள் புதிய பயனாளிகள் பெயர்கள் சேர்க்கப்படும். ஜூலை 14ம் தேதி 1 ரூபாய் அனுப்பி வங்கி கணக்கில் சோதனை செய்யப்படும். ஜூலை 15ம் தேதி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். அதேபோல் ஆகஸ்ட் மாதமும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக திருமணம் ஆன குடும்ப தலைவிகள் விண்ணப்பம் செய்ய முடியும்.

அருகே உள்ள நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் சென்று இதற்கான விண்ணப்பங்களை பெறலாம். இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை செய்யலாம். அதை பூர்த்தி செய்து கொடுக்கலாம். நாம் பூர்த்தி செய்த விண்ணப்பத்திற்கான அத்தாட்சி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஆக வரும். ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர், இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் முதல் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது. 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும். பெரும்பாலும் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கருணாநிதி பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் 'மகளிர் உரிமைத் தொகை' என்று கவனத்துடன் பெயரிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story