தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகள்: விண்ணம் செய்யலாம்

தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இந்திய அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், "தேசிய குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான விருதுகள் 2021-22"-க்கான விண்ணப்பங்களை தொழில் முனைவோரிடமிருந்து வரவேற்கிறது.
உற்பத்தித் துறையில் சிறந்த தொழில் முனைவோர் விருதுகள் 12, சேவை துறையில் 9, சிறந்த மகளிர் தொழில் முனைவோர் விருதுகள் 4, பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் 4, மாற்றுத் திறனாளிகளுக்கான விருதுகள் 2 என வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை www.dcmsme.gov.in அல்லது https://dashboard.msme.gov.in/na என்ற இணைய முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். தொழில் முனைவோர் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகுதி அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். சிறந்த தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு வருமானவரிச்சட்டம் 1961 பிரிவு 10 (17)-ன்படி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க 20.04.2022 கடைசி தேதியாகும். இது குறித்து மேலும் விவரங்களுக்கு எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம், சென்னை (044-22501011/12/13) மற்றும் கோவை – (0422-2230426/2233956), மதுரை (0452- 29 18331) மற்றும் திருநெல்வேலி (0462-2342137) அல்லது அருகில் உள்ள மாவட்ட தொழில் மையங்களை தொடர்பு கொள்ளுமாறு சென்னை கிண்டியில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர பிரிவுகள் வளர்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் பி.சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu