/* */

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு இதழியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

கலைஞர் எழுதுகோல் விருதுக்கு இதழியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதியன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு "கலைஞர் எழுதுகோல் விருது" வழங்கி கௌரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வகையில், 2022 ஆம் ஆண்டுக்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதில் ரூபாய் ஐந்து இலட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:-

விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும்.

பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்.

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

3. மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தன் விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை 600009 என்ற முகவரிக்கு 30.4.2023 க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

Updated On: 8 April 2023 12:19 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  3. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  4. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  5. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பான கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் நண்பனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!