செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படத்தை சேர்க்க நீதிமன்றத்தில் முறையீடு

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படத்தை சேர்க்க நீதிமன்றத்தில் முறையீடு
X

மதுரை உயர் நீதிமன்றம் கிளை

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயரையும், புகைப்படத்தையும் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஒரு சில இடங்களில் இந்து முன்னணியினர் முதலமைச்சரின் படத்திற்கு மேலே பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டினர்.

இது தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் சண்முகநாதன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்த விசாரணை இன்று மதியம் நடைபெறவுள்ளது

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!