மின் கட்டண உயர்வு அரசாணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மின் கட்டண உயர்வு அரசாணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
X

பைல் படம்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அரசாணை செல்லும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் எடுத்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்த்தவர் உறுப்பினராக சேர்க்கும் வரை மின் கட்டண உயர்வு செய்யக் கூடாது, அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் மீண்டும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழக அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு தடை கோரி, தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மின் கட்டண உயர்வு தொடர்பாக தீர விசாரித்து தான் தனி நீதிபதி தீர்பளித்துள்ளார் என்றும், இரு நீதிபதிகள் அமர்வு அதனை முழுமையாக விசாரிக்காமல் தனிநீதிபதி தீர்ப்பை ரத்து செய்துள்ளதாகவும் எனவே மின் கட்டண உயர்வு தொடர்பாக சென்னை உயர்ந்திமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது தமிழ்நாடு அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது