'தமிழகத்தில் இந்து விரோத ஆட்சி'- எச். ராஜா பகீர் குற்றச்சாட்டு

பெரம்பலூரில் எச். ராஜா பேட்டி அளித்தார்.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பயிற்சி பேரியக்கம் சார்பில் பயிற்றுநர் பயிற்சி பயலரங்கம் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்றது. பயிற்றுநர்களுக்கான பயிற்சி பயிலரங்கத்தில் பங்கேற்ற பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்து விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கோவில் சிலைகள் மர்மமான முறையில் தொடர்ந்து இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. இங்கு சர்வ சாதாரணமாக யாரும் செல்ல இயலாது. மலைப்பகுதியில் உள்ள இந்த இடத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் சென்று சிலைகளை சேதப்படுத்த முடியாது. எனவே இதில் மிகப்பெரிய சதி உள்ளது. இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை மெத்தனம் காட்டி வருவது ஏற்புடையதல்ல. இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேர்மையாகவும் முறையாகவும் செயல்படவில்லை.
மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை இங்குள்ள திராவிட கட்சிகள் தமிழக அரசின் திட்டம் போல பாவித்து மக்களிடம் ஒரு பொய்யான மாயையை உருவாக்கி வருகிறார்கள்.
தற்போது நடந்து வரும் கொரோனோ தடுப்பூசி திட்டம் முற்றிலும் மத்திய அரசின் திட்டம். ஆனால் இதனை தமிழக அரசு செய்வது போல மக்களிடையே ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி முகாம் நடைபெறும் இடங்களில் கருணாநிதி படத்தையும், ஸ்டாலின் படத்தையும் வைத்துவிடுகிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம் கண்டிப்பாக அந்த இடத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருக்க வேண்டும். அப்படி வைக்கப்பட வில்லை என்றால் தமிழக பாரதீய ஜனதா கட்சி முகாம் நடைபெறும் இடங்களில் பாரத பிரதமரின் போட்டோவை வைப்போம் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu