முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, 69 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு
X

முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உட்பட 69 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட இடங்களில், தங்கமணி வீடு உள்பட, 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம், கோவை, திருப்பூர், சேலம், கரூரில் உள்ள தங்கமணியின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

ஆந்திரா, கர்நாடகாவில் சோதனை

சேலத்தில், தங்கமணியின் மகன் தரணிதரனியின் வீடும் சோதனைக்கு தப்பவில்லை. அதிகபட்சமாக சென்னையில் 14, இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதுதவிர, ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகவில் இரு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கரூர் வேலாயுதம்பாளையத்தில் தங்கமணியின் உறவினர் வசந்தியின் வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு?

அதிமுக ஆட்சி காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர், தங்கமணி எம்.எல்.ஏ.; இவர், வருமானத்திற்கு அதிகமாக, ரூ. 4.85, கோடி குவித்ததாக, தங்கமணியின் மகன் தரணிதரன், மனைவி சாந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கிரிப்டோ கரன்சியில் தங்கமணி, அவரது மகன் ஆகியோர் முதலீடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலையில் இருந்து அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தங்கமணியும் தப்பவில்லை


அதிமுக முன்னாள் அமைச்சர்களில் சோதனைக்குள்ளாகி இருக்கும் ஐந்தாவது நபர் தங்கமணி ஆவார். ஏற்கனவே, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story