தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு
X

காட்சி படம் 

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் இந்த சூழலில் முழு ஊரடங்கு குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் உருவான கொரோனா 3ம் அலைக்கு பின்னர் 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டது. தமிழகத்திலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை ஆப்லைன் முறையில் நடத்த முடிவு செய்த பள்ளிக்கல்வித்துறை அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் பதிவாகி வருவதால் பள்ளிகள் மீண்டும் மூடப்படக்கூடும் என சில வதந்திகள் எழுந்து வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்