நாளை முதல் கோயில்களில் அன்னதானம் -அமைச்சர் சேகர்பாபு
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மீதமுள்ள தினங்களில் தமிழகம் முழுவதும் உள்ள 754 கோயில்களில் நாளை முதல் கோயில்களில் அன்னதானம் வழங்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று வெளியிட்ட அறிக்கை: அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 754 கோயில்களில், தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பழனி, ஸ்ரீரங்கம் கோயில்களில் முழு நாள் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
கடந்த 16ம் தேதி திருச்செந்துார் சுப்ரமணியசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்ரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் முழு நேர அன்னதான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவை பக்தர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றது.
கரோனா காரணமாக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இன்று அந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் கோயில்களிலும் அன்னதானக்கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu