ஓரிரு நாளில் அம்மா விளக்கம் தருவார்: மவுனம் கலைத்தார் பெண் சாமியார்

ஓரிரு நாளில் அம்மா விளக்கம் தருவார்: மவுனம் கலைத்தார் பெண் சாமியார்
X
சமூக வலைதளங்களில் பரபரப்பை உண்டாக்கிய பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா விவகாரத்தில், அவர்கள் தரப்பில் முதல் முறையாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் மீடியாவை அம்மா சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா என்பவர் பற்றிய தகவல்தான், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. திடீரென டிரெண்டிங் செய்து, பெண் சாமியாரே நினைத்து பார்க்காத அளவுக்கு, அவருக்கு நெட்டிசன்கள் விளம்பரம் தேடித் தந்துவிட்டனர். ஹோண்டா காரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் இந்த திடீர் சாமியார், வரும் 2021 புத்தாண்டு தினத்தில் முதல்முறையாக பொதுவெளியில் பக்தர்களை சந்திக்க உள்ளதாக, அவர்களின் தரப்பில் விளம்பரமும் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, பெண் சாமியார் குறித்த சர்ச்சைகளும் எழுந்துள்ளன. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தனது கணவருடன் விவாகரத்து செய்து தர வேண்டுமென்று அன்னபூரணி முறையிட்டதும், அரசு என்பவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பற்றியும் நெட்டிசன்கள், விளாவாரியாக பதிவுகளை வெளியிட்டு, இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும் சாமியார் தரப்பில் மவுனமே பதிலாக இருந்தது.


இந்த நிலையில், அன்னபூரணி அம்மா பக்தர்கள் தரப்பில் தற்போது, சமூக வலைதளத்தில் விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது. அதில், "மக்கள் அனைவருக்கும் வணக்கம், அம்மாவை பற்றி தவறான வதந்திகள் youtube news channel களில் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து விளக்கங்ளும் media மூலம் விரைவில் அம்மா உங்கள் அனைவருக்கும் தெளிவுபடுத்துவார். - Amma Devotee" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த சர்ச்சைக்குரிய பெண் சாமியார், "நான் எதற்கு ஓடி மறைய வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நான் தவறு செய்தால்தானே ஓடி மறைய வேண்டும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், "என்னை எது வழிநடத்துகிறதோ, அதன்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் இங்குதானே இருக்கிறேன். காவல்துறைக்கு அழைப்பு விடுத்து என்னை பிடித்துக்கொடுங்கள்" என்றும் பேசி இருக்கிறார்.

தற்போதைய வதந்திகள் மூலம், பொதுமக்களின் மனதில் எவ்வளவு அழுக்கு உள்ளது என்பது தெரிகிறது. எனவே, பொதுமக்களுக்காக இனி நிகழ்ச்சி நடத்தமாட்டேன். என்னைத் தேடி வரும் குழந்தைகளுக்கு மட்டும் நிகழ்ச்சி நடத்தப்போகிறேன் எனவும், பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!