அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
கோப்பு படம்.
தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நடந்து வருகிறது. பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட பாஜக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து சென்னையில் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக தொடர்ந்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அவசரமாக டெல்லி புறப்பட்டார். அங்கு தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரடியாக சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். ஆலோசனையின்போது அதிமுக பாஜக கூட்டணி தொடர வேண்டாம் என்று தன்னுடைய நிலைப்பாட்டை அமித்ஷாவிடம் எடுத்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் வருங்காலத்தில் பாஜக நினைத்த அளவிற்கு வளர முடியாது என வெளிப்படையாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி முடிவை உரிய நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் குழுவில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் எனவும் அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu