எஸ்.எஸ்.சி தேர்வுக்கு யூடியூப் மூலம் பயிற்சி.. அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ஏற்பாடு…

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு யூடியூப் மூலம் பயிற்சி.. அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி ஏற்பாடு…
X
Anna Administrative Staff College-மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தேர்வுக்கு அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி யூடியூப் மூலம் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

Anna Administrative Staff College-மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள MTS பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வு குறித்து அண்மையில் அறிவிப்பை வெளியிட்டது. ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர் கலந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தத் தேர்வில் பெரிய அளவில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்களுக்கு இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை.

இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பலவிதமான தேர்வுகளில் கலந்து, வெற்றி பெற்று, மத்திய அரசுத் துறைகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையானது மாநிலம் முழுவதும் உள்ள தனது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தற்போது இந்த முயற்சியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது AIM TN என்ற காணொலிப்பாதை (YouTube channel) மூலம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவலர்களுக்காக நடத்திய போட்டித் தேர்வுகளுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2A மெயின்ஸ் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்து அதன் காணொலிப் பாதையில் பதிவேற்றம் செய்து வருகிறது.

இந்த முயற்சிக்கு மாணவர்களிடம் இருந்து மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ள MTS தேர்விற்கும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி காணொலி வகுப்புகளை நடத்த உள்ளது. இதற்கான பயிற்சி வகுப்பு நாளை (பிப்ரவரி 1) தொடங்க உள்ளது.

தமிழ்நாட்டில் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ள பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்கள், தமிழ்வழியில் மட்டுமே படித்து ஆங்கிலத்தில் தேர்வினை எதிர்கொள்ளத் தயக்கப்படும் மாணவர்கள், தனியார் போட்டித் தேர்வு மையங்களில் பணம் செலவிட்டுப் பயிற்சிபெற இயலாத இளைஞர்கள் போன்றோரும் இந்த MTS போட்டித் தேர்வில் போட்டி

போட்டு, வெற்றி பெற்று மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்குடன் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி தனது ATM TN என்ற காணொலிப்பாதையில் (YouTube) பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்ய உள்ளது.

தேர்விற்கான பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் வல்லுநர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளன. தினமும் மூன்று காணொலிகள் என்ற அளவில் 60 நாட்களில் அனைத்துக் காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

மாணவர்கள் அனைவரும் மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புவதால் சுமார் 30 தேர்வுகளையும் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது. விடைத்தாள்கள் அனைத்தும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள உனக்குள் தேடு' என்ற செயலியின் வழியாக உடனுடக்குடன் திருத்தப்பட்டு மாணவர்களுக்குத் திரும்ப வழங்கப்படும் என்பதால் இந்த பயிற்சியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!