இன்றுடன் காலாவதியாகும் சூதாட்ட தடை சட்டம்.. ஒப்புதல் அளிக்க அன்புமணி வலியுறுத்தல்

இன்றுடன் காலாவதியாகும் சூதாட்ட தடை சட்டம்.. ஒப்புதல் அளிக்க அன்புமணி வலியுறுத்தல்
X

அன்புமணி ராமதாஸ்.

சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து ஆளுநரை சந்திக்க சட்டத்துறை அமைச்சர் அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு, சட்டத்துறையின் உரிய விளக்கத்துடன் 24 மணி நேரத்திற்குள் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் சூதாட்ட தடை மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இன்றுடன் கலாவதியாகிறது. இதனை இன்று மாலைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடையே வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம்.க்

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213(2)(ஏ)-இன்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும். அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசரசட்டம் காலாவதியாகிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுனரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!