அம்மா உணவகங்கள் மூடப்படுகிறதா?
அம்மா உணவகம் கோப்புப்படம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. பல அம்மா உணவகங்களில் பொதுமக்கள் வரவேற்பு இல்லாமல் வருவாயே இல்லாத நிலை உள்ளதாக புகார் நீண்டகாலமாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பேசிய கணக்குக்குழு தலைவர் தனசேகரன், சென்னையில் அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பல அம்மா உணவகங்கள் நாளொன்றுக்கு ரூ. 500 க்கும் குறைவாக வருமானம் வரும் நிலையில் உள்ளது. அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு நிதிஇழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மக்களிடம் வரவேற்பு இல்லாத பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை மூட வேண்டும். என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா,அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பட்டு வருகிறதோ அதேபோல் தொடர்ந்து செயல்படும். பொதுமக்களிடம் வரவேற்ற இல்லாத அம்மா உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு நிதிஇழப்பு ஏற்பட்டு வருகிறது என கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த மேயர் பிரியா, பொதுமக்களிடம் வரவேற்ற இல்லாத அம்மா உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu