கைரேகை பதிவு பொருந்தாவிட்டாலும் ரேசன் பொருட்கள் வழங்கப்படுகிறது: அமைச்சர்

பைல் படம்.
சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தனிநபர் குடும்ப அட்டை வழங்கப்படுமா, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகைகள் பொருந்தாத காரணத்தினால் பொருட்கள் வழங்கும் பிரச்சினைகள் நிலவுவதாக கூறினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, யாரையும் சாராத தனியாக சமைத்து வாழ்வை நடத்தும் தனிநபர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 91 லட்சத்து 71 ஆயிரத்து 807 தனிநபர் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்து 92 ஆயிரத்து 604 குடும்ப அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும், பிராக்சி முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும்,பாயிண்ட் ஆப் சேல் கருவியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு நிவர்த்தி செய்யப்படும் என்றும் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu