சென்னை புறநகா் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி
சென்னை புறநகா் மின்சார ரயில்களில் மூன்றாம் கட்டமாக இன்று (23 ம் தேதி) முதல் பொதுமக்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் பொதுஊரடங்கு தளா்வுகள் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், புறநகா் மின்சார ரயிலில் மூன்றாம் கட்டமாக நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்க இன்று புதன்கிழமை (டிச.23) முதல் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி காலை 7 மணிக்கு முன்னதாகவும், காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் சேவை முடியும் நேரம் வரையும் பயணம் செய்யலாம்.
காலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நெரிசல் மிகுந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில் அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டும் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். பொதுமக்கள் இந்த நேரத்தில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.ரயில் நிலையத்தின் வளாகத்தில் பயணிகள் நுழையும்போது, முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். நெரிசல் மிகுந்த நேரங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதால், ரயில் பயணிகளுக்கு வசதியை பெரிதும் மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu