தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
X

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று பணி செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியம், கீழ் நம்பிபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை கண்டிக்கும் வகையிலும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக சட்டமன்றத்தில் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுக்க உள்ள தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்வது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.


இந்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்று (23.03.23) திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் உணர்வுப் பூர்வமான கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் இனி வருங்காலத்தில் நிகழாமல் பணிப்பாதுப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு வைத்து உள்ளனர்.

கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணி செய்த போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்றது. ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்யவில்லை என்பதால் பள்ளியில் கற்பித்தல் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!