தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்து முன்னணி ஏற்பாடு

விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்
Ganesh Chaturthi Festival- வரும் 31ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார், அரசூர் ஆகிய இடங்களில், சில மாதங்களாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், காகிதக்கூழ், கிழங்கு மாவு மூலம் தயாரிக்கப்பட்ட சிலை பாகங்கள், திருப்பூர் அருகே உள்ள அலகுமலை மற்றும் கொடுவாய் எடுத்து வரப்பட்டு, அவற்றை பொருத்தும் பணி வேகமாக நடக்கிறது.
ஈரோடு மற்றும் பவானிசாகரிலும் இப்பணி நடக்கிறது. தொடர்ந்து, சிலைகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது. இப்பணி முடிந்த பின்பு அடுத்த வாரத்தில், அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள், அனுப்பபட உள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:
கோவையில் 6,000, திருப்பூரில் 5,000 உட்பட, தமிழகம் முழுவதும், 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் ஊர்வலம் நடத்த உள்ளதால், பிரமாண்டமாக நடத்தப்படும். வரும் 31 முதல், செப்., 4ம் தேதி வரை விழா கொண்டாடப்படும்.
செப்., 3ம் தேதி, திருப்பூர் மாநகரம், ஈரோடு, பொள்ளாச்சி, 4ம் தேதி கோவை, நீலகிரியில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.திருப்பூர் விசர்ஜன ஊர்வலத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும், கோவையில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவும் பங்கேற்க உள்ளனர்.இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம்; தேசிய சிந்தனையை வளர்ப்போம்' என்ற கோஷத்துடன் கொண்டாடப்பட உள்ளது, என்றார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu