மது விற்பனை சாதனையல்ல; அவமானம்: ராமதாஸ் காட்டம்

மது விற்பனை சாதனையல்ல; அவமானம்: ராமதாஸ் காட்டம்
X

ராமதாஸ்.

தமிழகத்தில் மது விற்பனை சாதனையல்ல; அவமானம் என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் சில்லறை விற்பனை கடைகள் வாயிலாக பல்வேறு விதமான மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த மனு விற்பனை வார கடைசி நாட்களான சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் மது விற்பனை ஜோராக நடைபெற்று வரும். அரசு விடுமுறை நாட்களான சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், மகாவீர் ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறை முன்னதாக அறிவிக்கப்படுவதால், இந்த தினங்களுக்கு முன்னரே டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டும். அதேபோன்று பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு முன்பும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதும்.

அதேபோன்று தீபாவளிப் பண்டிகையையொட்டி, மது வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதன்படி கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22ம் தேதியன்று, பெரு நகரங்களான சென்னையில் ரூ.38.64 கோடிக்கும், திருச்சியில் ரூ.41.36 கோடிக்கும், சேலத்தில் ரூ.40.82 கோடிக்கும், மதுரையில் ரூ.45.26 கோடிக்கும், கோவையில் ரூ.39.34 கோடிக்கும் விற்பனை ஆனது.

அடுத்த நாளான 23ம் தேதி, சென்னையில் 51.52 கோடிக்கும், திருச்சியில் ரூ.50.66 கோடிக்கும், சேலத்தில் ரூ.52.36 கோடிக்கும், மதுரையில் ரூ.55.78 கோடிக்கும், கோவையில் ரூ.48.47 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த இரு நாட்களில் மட்டும் மொத்தமாக ரூ.464.21 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், மது விற்பனையில் சாதனை படைத்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல, அவமானம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான நேற்று ஒரே நாளில் ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளான இன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல.... அவமானம்.

இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது.

தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!