இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு

இலங்கைக்கு  நிவாரணப்பொருட்கள்: நாளை சென்னையில் இருந்து அனுப்பிவைப்பு
X
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள், நாளை சென்னையில் இருந்து கப்பம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பல மடங்கு அதிகமான விலைக்கு கிடைக்கிறது. இதனால் மக்கள் கடும் துயரை சந்தித்து வருகிறது.

இலங்கைக்கு இந்திய அரசு நிதி உதவி, பொருள் உதவி மற்றும் மருந்து, உணவுப் பொருட்களை வழங்கி உதவி வருகிறது. தமிழக அரசும் தன் பங்கிற்கு, அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க முடிவு செய்தது.

அதன்படி, இலங்கை மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்து வைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள், நாளை மாலை 5, மணிக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இலங்கைக்கு, தமிழகம் அனுப்பி வைக்கும் நிவாரணப் பொருட்களில், ரூ. 80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ. 15 கோடிமதிப்புள்ள 500 டன் பால் பவுடர், ரூ. 28 கோடி மதிப்பிலான 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!