அ.தி.மு.க. பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் வெளிநடப்பு ஏன்? வைத்திலிங்கம் ஆவேச பேட்டி..!
அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.
சென்னையில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த ஆவேச பேட்டி: அ.தி.மு.க பொதுக்குழுவில் பொய்யாக கையெழுத்திட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர். மேலும் புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். அ.தி.மு.க.வின் நடைமுறைகளை மாற்றி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டம் என்றே சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க. பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை அவைத்தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் பொதுக்குழுவை அவைத்தலைவர் கூட்ட முடியாது.
நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. அதையும் மீறித்தான் எதிர்தரப்பினர் பொதுக்குழுவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த பொதுக்குழு ஜூலை 11 ல் கூடுவதற்கு சாத்தியமே இல்லை. எங்கள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர இருக்கிறோம். கட்சியின் நலன்கருதி ஓ.பன்னீர் செல்வம் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளார். இவ்வாறு, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆவேசமாக குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu