உஷ்.....அப்பாடா.....இன்றுடன் முடிந்தது அக்னிநட்சத்திரம்: நாளை மழை பெய்ய வாய்ப்பு

உஷ்.....அப்பாடா.....இன்றுடன் முடிந்தது அக்னிநட்சத்திரம்: நாளை மழை பெய்ய வாய்ப்பு
X

பைல் படம்.

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. கத்தரி வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த 2 வார காலமாகவே தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவத் தொடங்கியது.பல ஊர்வகளில் வெயில் சுட்டெரித்தது பெரும்பாலான ஊர்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவானது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் இன்னும் ஓரி ரு நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!