மதுரை: 8 பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலக மொழியாக இந்தியை மேம்படுத்த ஆலோசனை

மதுரை: 8 பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலக மொழியாக இந்தியை மேம்படுத்த ஆலோசனை
X
அலுவல் மொழியாக இந்தி பயன்பாட்டில் சிறப்பாக பணியாற்றிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு ‘இஸ்பத் ராஜ்பாஷா சம்மான்’ விருது வழங்கப்பட்டது.

எஃகு துறைக்கு உட்பட்ட 8 பொதுத்துறை நிறுவனங்களுக்கான இந்தி ஆலோசனை குழுகூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராம் சந்திர ப்ரசாத் சிங் பங்கேற்றார்.

மதுரையில் நடந்த எஃகு துறைக்கு உட்பட்ட 8 பொதுத்துறை நிறுவனங்களுக்கான இந்தி ஆலோசனை குழு கூட்டத்தில், மத்திய எஃகுத்துறை அமைச்சர் ராம் சந்திர ப்ரசாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.

எஃகு துறைக்கு உட்பட்ட எட்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கான இந்தி ஆலோசனை குழு கூட்டம் மதுரையில் இன்று நடந்தது. இதற்கு மத்திய எஃகுத்துறை அமைச்சர் ராம் சந்திர ப்ரசாத் சிங் தலைமை தாங்கி உரையாற்றினார். இதில் எம்.பி.க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தி ஆலோசனை குழு கூட்டத்தின் துணைத் தலைவரும், எஃகு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சருமான பஃகன் சிங் குலாஸ்தே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியை பயன்படுத்தும் பிரச்சாரத்தில் அடையப்பட்ட சாதனைகளை, எட்டு பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் எடுத்துரைத்தனர். இந்தி பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, இந்த குழு ஆய்வு செய்தது. அலுவலக பணியில் இந்தியை பயன்படுத்துவதற்கு எஃகுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளையும் இந்த குழு பாராட்டியது.

எஃகுத்துறை அமைச்சகத்தில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க உறுப்பினர்கள் தெரிவித்த ஆலோசனைகளை மத்திய அமைச்சர் ராம் சந்திர ப்ரசாத் சிங் வரவேற்றார். இந்த ஆலோசனைகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுப்பினர்களுக்கு அவர் உறுதியளித்தார். அலுவல் மொழியாக இந்தி பயன்பாட்டில் சிறப்பாக பணியாற்றிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு 'இஸ்பத் ராஜ்பாஷா சம்மான்' விருதுகளையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மத்திய அமைச்சர் ராம் சந்திர ப்ரசாத் சிங் வழங்கினார்.



Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி