அ.தி.மு.க. பொதுக்குழு முடிவை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஏற்பார்கள் - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி

அ.தி.மு.க. பொதுக்குழு முடிவை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஏற்பார்கள் - துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி
X

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.

பொதுக்குழு முடிவுகளை ஓ.பன்னீர் செல்வம், இடைப்பாடி பழனிச்சாமி ஆகிய இரு தலைவர்களும் ஜூன் 23 ல் ஏற்றுக்கொள்வார்கள் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார்.

சென்னையில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜூன் 23 ல் அ.தி.மு.க பொதுக்குழு வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் திட்டமிட்டபடி நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இபிஎஸ்க்கு ஓ.பி.எஸ் அனுப்பிய கடிதம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.

ஓ.பி.எஸ் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றிருந்தால் இ.பி.எஸ் எங்களிடம் தெரிவித்திருப்பார், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனையில் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அதிமுக உள்கட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர் செல்வம் உறுதியாக வருவார். பொதுக்குழுவில் பங்கேற்று ஓ.பன்னீர் செல்வம் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார்.

பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. பொதுக்குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தலைவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். இவ்வாறு, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறினார்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!