இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ் குடுமிப்பிடி சண்டை: அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் முடங்குமா?
அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனருமான ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விவரம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், வருகிற 11 ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வளவு பெரிய தொகை அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சுருட்டியதாகத்தான் இருக்கும். அதாவது. மக்கள் வரிப்பணத்தை அபகரித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே நடைபெறும் மோதலினால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே, அ.திமு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் 28 ம் தேதி மனு அனுப்பியுள்ளேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.
இதனால் இந்த மனுவை பரிசீலித்து அ.தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu