அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள்: மருந்து கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

பைல் படம்
அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்துகள் விதிகள், 1945-இன் படி குற்றமாகும்.
தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மருந்துகள் மற்றும் அழகு சாதனச்சட்டம், 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-இன் கீழ் விதி மீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த (01.04.2023 31.12.2023) 9 மாதங்களில் 219 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 381 மருந்து விற்பனையாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த மொத்த விற்பனை நிறுவனங்களின் 21 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்த 9 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் இத்துறை மூலம் இனி வருங்காலங்களிலும் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள், 1945-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
அரசு பேருந்துகளில் பயணித்த 3 பேருக்கு தலா ரூ.10,000
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான குலுக்கல் முறையில் மூன்று (3) பயணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (01.02.2024) கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலை தூர பேருந்துகளில், பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, செயலி etc., மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகின்றது.
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதத்திலும் அது போன்ற நாட்களில் பயணிப்பதற்காக, முன்பதிவு செய்யும் பயணிகளில் மூன்று பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- வழங்கும் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜனவரி 2024 மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை நடைமுறை படுத்தும் வகையில், ஜனவரி-2024 மாதத்திற்கான மூன்று (3) வெற்றியாளர்களை (பயணிகள்) கணினி குலுக்கல் முறையில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (01.02.2024) தேர்வு செய்தார், அதன் விவரங்கள் கீழ்வருமாறு,
ஜனவரி-2024 மாதத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட, மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000/- விரைவில் வழங்கப்படும்.
வ.எண் | பயணச்சீட்டு | தேர்ந்தெடுக்கப்பட்ட பயணியின் பெயர் | ரொக்கப்பரிசு (ரூபாய்) |
1 | T50959052 | ESSAKKI MURUGAN.S | 10,000/- |
2 | T51210787 | SEETHA.K | 10,000/- |
3 | T51655633 | IMTEYAZ ARIF | 10,000/- |
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu