வாக்களித்தார் நடிகர் விஜய் -சைக்கிளில் இருந்து காருக்கு மாறினார்

வாக்களித்தார் நடிகர் விஜய் -சைக்கிளில் இருந்து காருக்கு மாறினார்
X

வாக்குச்சாவடியில் ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் விஜய்

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில், நடிகர் விஜய், தனது வாக்கினை பதிவு செய்தார். கடந்த முறை சைக்கிளில் வந்தவர், இம்முறை காரில் வந்தார்.

உள்ளாட்சித் தேர்தலில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார். இதற்காக சிவப்பு நிற காரில் தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவரை, ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து பின்தொடந்து வந்தனர்.
வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததும் மாஸ்க் அணிந்து , கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடிகர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த முறை சட்டமன்றத் தேர்தலில், சைக்கிளில் வந்து வாக்களித்த நடிகர் விஜய், இம்முறை சிவப்பு நிற காரில், கறுப்பு நிற மாஸ்க் அணிந்து வந்திருந்தார்.
உள்ளாட்சித் தேர்தலில், நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கியுள்ள நிலையில், விஜய் முதல் நபராக வாக்களித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, தேர்தல் ஆணையர் பழனிகுமார் உள்ளிட்டோரும் காலையிலேயே வந்து தத்தமது வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

Tags

Next Story
ai marketing future