நடிகரும், திரைப்பட இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்

நடிகரும், திரைப்பட இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்
X
நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார். சென்னையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pratap Pothan Passed Away : திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன், தனது 69வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

நடிகர் ,இயக்குனர், எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளராகிய பன்முக தன்மையை கொண்ட பிரதாப் போத்தன் 1980 இல் தனது திரைப்பட திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். மூடுபனி படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக பேசப்பட்டது.


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளதோடு மட்டுமல்லாது, 10க்கு மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.

1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், பிரதாப் போத்தன் பிறந்தார். தனது 15வது வயதிலேயே, தந்தையை இழந்த பிரதாப் போத்தனுக்கு ஹரி போத்தன் என்ற சகோதரர் உள்ளார்.

தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆன பிரதாப் போத்தன், கமல்ஹாசன் நடிப்பில் வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.


1985ஆம் ஆண்டில் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடுகளால் அடுத்த ஆண்டே, அவர்கள் விவகாரத்து பெற்று விட்டனர்.

1990ஆம் ஆண்டில் அமலா என்பவரை திருமணம் செய்த பிரதாப் போத்தன், 2012ஆம் ஆண்டில் அவரையும் விவாகரத்து செய்தார். இவருக்கு கெயா போத்தன் என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் பிரதாப் போத்தன் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!