தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச் செயல் அதிகாரியாக ஏபி ரபியுல்லா நியமனம்

தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச் செயல் அதிகாரியாக ஏபி ரபியுல்லா நியமனம்
X
வேளாண் இணை இயக்குநரரான ரபியுல்லா தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச்செயல் அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

வேளாண் இணை இயக்குநரரான ரபியுல்லா தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச்செயல் அதிகாரியாக செயல்படுவார் என அறிவிப்பு

இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத (மார்க்க) சம்மந்தமான பணிகளுக்கும் நல்ல நோக்கங்களுக்கும், அறப்பணிகளுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அர்ப்பணிப்பதே வக்பு ஆகும்.

இஸ்லாமியரின் மத (மார்க்க), சமூக மற்றும் பொருளாதார பணிகளுக்கு வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன. கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், பள்ளி வாசல்கள் மற்றும் அடக்க தளங்கள் (தர்கா)களுக்கும் வக்பு அமைப்புகள் உதவி வருகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு வக்பு அமைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்புக்கள் அங்கீகாரம் பெற்று உள்ளன.

வக்பு வாரிய சொத்துக்களை திறமையாக நிர்வாகம் செய்ய அறக்கட்டளை நிர்வாகிகளின் அதிகாரத்தை சட்டம் கட்டுப்படுத்துகிறது. வக்பு சட்டம் மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும் வக்பு சொத்துக்கள் திறமையான முறையில் மேலாண்மை மற்றும் நிர்வாகம் சம்பத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டம் நாடளுமன்றதால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில் சில குறைப்பாடுகள் இருந்த காரணத்தால் 1959,1964 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. 1995 இல் பல நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பேரில் பரவலான அம்சங்களை உள்ளடக்கிய புதிய சட்டம் இயற்றப்பட்டது

மாநில அரசுகள் வக்பு வாரியங்களை அமைக்க வேண்டும் என்பது வக்பு சட்ட நெறிமுறை வகுத்து உள்ளது. வக்பு சொத்துகளை ஆய்வு செய்வதுடன், வக்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு தீர்வு காண வக்பு நடுவர் மன்றங்களை ஏற்படுத்தவும் இந்த பணிகளுக்காக ஆய்வு ஆணையர்களையும் நியமிக்க வேண்டும் என்றும் இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

இதுவரை தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, அஸ்ஸாம், பிஹார், குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், பஞ்சாப்,மகாராஷ்டிரம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் வக்ப் வாரியங்களை அம்மாநில அரசுகள் அமைத்துள்ளன.

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லா நியமனம் செய்யப்பட்டார். வேளாண் இணை இயக்குனரான ரபியுல்லா வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. முழுநேர தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியலில் இருந்து ரபியுல்லா தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
future ai robot technology