அறிமுகமாகிறது ஆவின் குடிநீர்: அமைச்சர் அறிவிப்பு

அறிமுகமாகிறது ஆவின் குடிநீர்: அமைச்சர் அறிவிப்பு
X
ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என்று அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார்.

ஆவின் நிறுவனம் மூலமாக வாயிலாக சமன்படுத்தபட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால் , கொழுப்புசத்து நிறைந்த பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் என்ற வகைகளில் அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் விநியோகிக்கப்படுகிறது. அத்துடன் ஆவினில் மோர், தயிர், லஸ்ஸி , இனிப்பு உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில் ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளிலும் வாட்டர் பிளாண்ட் உள்ளதால் விரைவில் குடிநீர் பாட்டில் தயாரிப்பு பணி தொடங்க உள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்பட உள்ளது. 1/2 மற்றும் 1 லிட்டர் பாட்டில்களை பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஆவின் குடிநீரை விற்க திட்டமிட்டப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!