சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு

சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சால் பரபரப்பு
X
சென்னையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, தற்போது கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகரின் கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ளது வீரபத்திர சுவாமி கோவில். அதே பகுதியில் வசித்து வரும் முரளி கிருஷ்ணன் என்பவர், மது போதையில் கையில் பெட்ரோல் குண்டோடு கோயில் முன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அப்போது கோயிலில் இருந்த பூசாரி அலறியடித்து வெளியே ஓடி வந்தார். இதனையடுத்து ஒரு சில நிமிடங்களில் கோயில் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அப்போது கோயிலில் வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பெட்ரோல் குண்டை வீசிவிட்டு குடிபோதையில் உளரிய முரளி கிருஷ்ணன், கடந்த நான்கு ஆண்டுகளாக இக்கடவுளே வழிபட்டு வருவதாகவும். கடவுள் தனக்கு திருப்பி ஏதும் தரவில்லை என கூறி மது போதையில் உளறியுள்ளார். இது சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த கொத்தவால்சாவடி போலீசார் முரளிகிருஷ்ணணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!